கோவை வியாபாரியிடம் ரூ.71 லட்சம் மோசடி – 2 பேர் மீது வழக்கு !

X
கோவை புதூரைச் சேர்ந்த வியாபாரி முருகேசனிடம், அதிக லாபம் தருவோம் என நம்ப வைத்து ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக சஞ்சய் ரெட்டி மற்றும் அவரது மனைவி லாவண்யா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்சல்டன்சி மற்றும் சினிமா தயாரிப்பு பெயரில் பணம் பெற்று வாக்குறுதியின்படி லாபம் வழங்காததால், ஏமாந்த முருகேசன் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

