அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.14 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்.

அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.14 லட்சத்திற்கு மக்காச்சோளம்  ஏலம்.
அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.14 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்.
அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.7.14 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம். தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனைகுழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைப்பெற்றது. இதில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 27,756 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மக்காச்சோளம் விலை அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2635- க்கும் குறைந்த பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2452 -க்கும் ஏலம் போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.7,14,050- க்கு மக்காச்சோளம் விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.
Next Story