பரமத்தி வேலூரில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாள் விழா.

X
Paramathi Velur King 24x7 |27 Aug 2024 9:26 PM ISTபரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாள் விழா.
பரமத்தி வேலூர்,ஆக:27- தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்தநாளை முன்னிட்ட நாமக்கல் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி கொடி ஏற்றியும் தொழிற்சங்க கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அம்மன் வெங்கடாசலம் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெகன்,மாவட்ட இளைஞர் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வி பி ராஜ்பரத்.தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே கே ராமன், நாமக்கல் நகர செயலாளர் நாகார் தியாகராஜன்,கபிலர்மலை ஒன்றிய செயலாளர் வீர திலகம் கேப்டன் மன்றம் ஜெகதீசன் பரமத்திவேலூர் பேரூர் கழக துணைச் செயலாளர் சிவனேசன்,சீனிவாசன் அவை தலைவர் தண்டபாணி மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
