தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.
X
தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.
அரியலூர், மார்ச்.2 - ஜெயங்கொண்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  72-வது பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் நகர திமுக செயலாளர் வெ..கருணாநிதி தலைமையில் அரசு தலைமை மருத்துவமனையில் 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது., அதனை  தொடர்ந்து நகராட்சி  பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து காந்தி பூங்கா முன்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிஆர்எம் பொய்யாமொழி, நகரவைத் தலைவர் ஞானபிரகாசம், நகர துணைச் செயலாளர்கள் முரசொலிகுமார், நிர்மலாசெல்வம், நகர பொருளாளர் இரமேஷ்  மாவட்ட பிரதிநிதிகள் ராஜமாணிக்கம் கொளஞ்சியப்பா பிரபாகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இராமராஜன், மாவட்ட மீணவரணி அமைப்மாளர் இராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கரிகாலன், வார்டு மாணவரணி அமைப்பாளர் அபிஷேக் , வட்ட செயலாளர்கள் விஜயன், குமரவேல், வெற்றிவேலன், இதயத்துல்லா, ஆனந்தன், நடராஜன், கணேசன், மற்றும்  நகர நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story