உடையார்பாளையத்தில்,திமுக தலைவர், தமிழ்நாடு முதலலைச்சரின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

X
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் திமுக சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பேரூர் துணை செயலாளர் ராயர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தலைமை பேச்சாளரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான புகழேந்தி, அரியலூர் மாவட்ட செயலாளரும் ,தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் ,தலைமை கழக பேச்சாளர் கவிஞர் நன்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிகள் திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலாசுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகர் (ஜெயங்கொண்டம் வடக்கு), கலியபெருமாள்(ஆண்டிமடம் தெற்கு), பொதுக்குழு உறுப்பினர் ஷாஜஹான், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

