பொதுமக்கள் பல்வேறு துறை தொடர்பாக 725 மனுக்கள்

பொதுமக்கள் பல்வேறு துறை தொடர்பாக 725 மனுக்கள்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளித்தனர்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோ.அரங்கநாதன், தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) சந்தான கோபால கிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி தொடங்கி வைத்தனர். முகாமில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக 260 மனுக்களையும், வருவாய் துறை தொடர்பாக 193 மனுக்களையும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பாக 54 மனுக்களையும், இதர துறை தொடர்பாக 218 மனுக்களையும் அளித்தனர். மொத்தம் 725 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், சுப்ரமணியன் (கிராம ஊராட்சி), ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story