ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 7.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

X
Ranipet King 24x7 |21 Dec 2025 5:07 PM ISTராணிப்பேட்டை மாவட்டம் வாக்காளர்கள் நீக்கம் முதற்கட்ட பணிகள் தான் நிறைவடைந்துள்ளது நீக்கப்பட்ட வாக்காளர்களின் உண்மைத்தன்மையை பி.எல்.ஓ.மூலம் நாங்கள் உறுதிப்படுத்த உள்ளோம் - வேலூர் எம்பி கதிர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு ராணிப்பேட்டையில்பேட்டி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாக்காளர்கள் நீக்கம் முதற்கட்ட பணிகள் தான் நிறைவடைந்துள்ளது நீக்கப்பட்ட வாக்காளர்களின் உண்மைத்தன்மையை பி.எல்.ஓ.மூலம் நாங்கள் உறுதிப்படுத்த உள்ளோம் - வேலூர் எம்பி கதிர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு ராணிப்பேட்டையில்பேட்டி. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 7.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிகமாக நிதியை ஒதுக்கிய ஒரே மாநிலம், காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாநிலம் தமிழகம் தான் எனவும், பள்ளி கல்வித்துறையை பொருத்தவரையில் கூரைகளே இல்லாமல் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் சிறந்த கல்வியை கொடுப்பது தமிழகம் என பெருமிதமாக தெரிவித்தார். தமிழக மாணவர்களுக்கு நல்லது செய்யவே அவதாரம் எடுத்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல நன்மைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதிமுக விளம்பரத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய பைகளில் அச்சிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றாமல் மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் அப்படியே மாணவர்களுக்கு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்தார். 2000 கோடி ரூபாயில் 10 லட்சம் லேப்டாப் ஜனவரியில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து பதிலளித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்த முகாமின் முதற்கட்ட பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதுஒவ்வொரு தொகுதியிலும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்த உண்மை தன்மையை பி.எல்.ஓ. மூலமாக உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டு வழங்குகின்ற முடிவை தலைமை தான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் கல்வித்துறை அலுவலகர் மற்றும் லாலா பேட்டை ஊராட்சி தலைவர் கோகுல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
