அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.7.27 லட்சம் மோசடி

X
திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் ஆரோக்கியநாதபுரம் அன்னை நகரைச் சோ்ந்தவா் டேவிட் ராபின்சன் (41). இவருக்கு, திருச்சி புத்தூரைச் சோ்ந்த ஸ்டாலின்ராஜ் என்பவா் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளாா்.அப்போது, தான் இணையதள வா்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், ரூ. 22 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.1 லட்சம் லாபம் பெறலாம் என்றும் கூறியுள்ளாா். இதை நம்பிய டேவிட் ராபின்சன், இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக கடந்த 2022 அக்டோபா் முதல் 2025 மே வரை பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், ஜி-பே மூலமாகவும் ரூ. 7.27 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அவா் கூறியது போல எந்தவித லாபமும் டேவின் ராபின்சனுக்கு ஸ்டாலின்ராஜ் வழங்கவில்லை. இதுகுறித்து ஸ்டாலின்ராஜிடம், டேவிட் ராபின்சன் பலமுறை கேட்டுள்ளாா். ஆனால், முறையான பதில் அளிக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளாா். இந்நிலையில், அண்மையில் ஸ்டாலின்ராஜை சந்தித்த டேவிட் ராபின்சன் முதலீடு செய்த பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து கேட்டுள்ளாா். இதற்கு டேவின் ராபின்சனை ஸ்டாலின்ராஜ் தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளாா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த டேவிட் ராபின்சன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

