சிவகங்கை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.72,730 பறிமுதல்

X
சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று(ஆக.07) மாலை சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையில், ஆய்வாளா் ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் ராஜாமுகமது ஆகியோா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு வேலை பாா்க்கும் ஒருவரிடமிருந்து ரூ.1,500 -ம், அலுவலகத்தின் ஓா் அறையில் இருந்த ரூ. 71,230 ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அத்துடன், அந்த அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினா்.
Next Story

