இலவச வீடு கேட்டு 73 மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு

இலவச வீடு கேட்டு 73 மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு
X
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் இலவச வீடு கேட்டு, குமாரபாளையம் தாசில்தாரிடம் 73 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் இலவச வீடு கேட்டு, குமாரபாளையம் தாசில்தாரிடம் 73 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.. சார்பில், வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகளும், வீட்டுமனை கட்டும் இடம் இருப்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் வேண்டி, குமாரபாளையம் தாசில்தார் சிவகுமாரிடம் 73 மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், தாலுக்கா குழு தலைவர் அர்ஜுனன், துணைத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர் அருண்குமார், உதவி செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் கனகவல்லி மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story