திருக்கானூர்பட்டியில் ரூபாய் 7.36 கோடி  மதிப்பில் பால் பொருட்கள் பண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர்  துவக்கி வைத்தார்.

திருக்கானூர்பட்டியில் ரூபாய் 7.36 கோடி  மதிப்பில் பால் பொருட்கள் பண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர்  துவக்கி வைத்தார்.
X
ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், திருக்கானூர்பட்டி பால் பொருட்கள் பண்ணையினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), ஆவின் பொதுமேலாளர்  சே.சரவண குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1939 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  தற்பொழுது 422 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 63,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 9 தொகுப்பு பால் குளிருட்டும் நிலையங்கள் மூலம் 48,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு தஞ்சை மத்திய பண்ணைக்கு கொண்டு வரப்படுகிறது.  மேலும், தஞ்சாவூர் மத்திய பண்ணையில் 9 பால் வழிதடங்கள் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 15,000 லிட்டர் என மொத்தம் 63,000 லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு தரமான பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி தேசிய ரூர்பன் இயக்கம் திட்டம் முலம் ரூ.7.36 கோடி மதிப்பில் தஞ்சாவூர் திருக்கானூர்பட்டியில் பால் பொருட்கள் உற்பத்தி பண்ணை  பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில், பால் பொருட்களான குலோப்ஜாமுன், பாதாம்மிக்ஸ், ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பா, தயிர், மோர், பன்னீர் ஆகிய பால்பொருட்கள் அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சந்தைப்படுத்தப்படவுள்ளது.  இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், துணைப் பதிவாளர்கள் ப.வெங்கடேசன், க.சந்திரசேகர ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story