அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 75 ம் ஆண்டு வைர விழா

அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 75 ம் ஆண்டு வைர விழா
X
அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 75 ம் ஆண்டு வைர விழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், விளங்காடு ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 75 ம் ஆண்டு வைர விழா தலைமை ஆசிரியர் முனைவர் டி.சாரதா, தலைமையில் விழா நடைபெற்றது. விளாங்காடு பள்ளியின் 75-ஆம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு பள்ளி சிறார்களின் கலை நிகழ்சிகள், சிறந்த மாணவ செல்வங்களுக்கு விருது வழங்குதல், அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குதல், வைர விழாவிற்கு நன்கொடை வழங்கிய திருவாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தல் மற்றும் சிறப்பு அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் அன்புராஜ், துணைத்தலைவர் ராஜேஷ்,கோட்டகயப்பாக்கம் அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், நன்மொடையாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story