தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது - ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது - ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை
X
முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது கிடைத்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பன்னாள் கிராமத்தில், 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி, 2017 -ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து, அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில், 124 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை, உள் கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதிகள், தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கியப் பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, 2024- ம் ஆண்டின், மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகை ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையினை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்திடம் வழங்கினார். 1976 -ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருக்கும் இப்பள்ளிக்கு, காமராஜர் விருது கிடைத்துள்ளதை கொண்டாடும் விதமாக, பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பிரியா காளிதாசன் மற்றும் பெற்றோர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வில்லவன் கோகோதை, பள்ளி ஆசிரியர்கள், புது முயற்சியாக பள்ளிக்கு இந்த ஆண்டு 32 மாணவ, மாணவிகளை சேர்த்துள்ளார்கள். பள்ளிக்கு, காமராஜர் விருது கிடைத்ததை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கிராம மக்கள், இனிப்பு வழங்கி கொண்டாடினர். காமராஜர் விருது பெறுவதற்கு கடும் முயற்சி எடுத்து பணியாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்தை, பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் , கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story