உண்டியலில் காணிக்கை ரூ.75 லட்சம்

X

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.75 லட்சம் கிடைக்கப்பெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 75 லட்சம் கிடைக்கப் பெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோயில், 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (மார்ச் .25) நடைபெற்றது. இதில் ரூ. 75,48,747 கிடைத்தன.பலமாற்று பொன் இனங்கள் 257 கிராமும், பல மாற்று வெள்ளி இனங்கள் 429 கிரா மும், 335 அயல்நாட்டு பணத் தாள்களும் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.
Next Story