ராஜகோபுரம் அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவு

ராஜகோபுரம் அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவு
X
ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. 
ஈரோட்டை அடுத்த திண்டலில், பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், 2. 11 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, பாபு, முத்துசாமி ஆகியோர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினர்.  அதனைத்தொடர்ந்து, ராஜகோபுராம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறியதாவது: ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. அத்துடன் கோயில் வளாகத்தில் சிவன் கோயில் அமைப்பதற்கான கட்டுமான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story