பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவ வேண்டும்-தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருதுநகர் துணை மண்டல உதவி இயக

பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவ வேண்டும்-தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருதுநகர் துணை மண்டல உதவி இயக
X
பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவ வேண்டும்-தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருதுநகர் துணை மண்டல உதவி இயக்குனர் ரத்தினம் பேச்சு...
பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவ வேண்டும்-தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விருதுநகர் துணை மண்டல உதவி இயக்குனர் ரத்தினம் பேச்சு... மத்திய அரசின் புள்ளியியல் துறையின்தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75 ஆவது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் துணை மண்டல அலுவலகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மின் விளம்பரப் பலகை திறப்பு விழா விருதுநகர் துணை மண்டல உதவி இயக்குனர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் புள்ளியியல் துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தரி மற்றும் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சுமதி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் பேசிய தேசிய புள்ளியல் உதவி இயக்குனர் ரத்தினம்,கடந்த 75 ஆண்டுகளில் தேசிய புள்ளியல் அலுவலகம், சமூக பொருளாதார ஆய்வுகள், சிறு தொழில், விலைவாசி ஏற்றத்தாழ்வு, விவசாயம் சார்ந்த புள்ளி விபரங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது என்றும் பொதுமக்கள் தங்கள் அலுவலர்களுக்கு நம்பகமான புள்ளி விபரங்களை கொடுத்து உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.முன்னதாக இவ்விழாவில் முதுநிலை புள்ளியியல் அலுவலர் சேது மகேஷ்வரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசு புள்ளியியல் துறை அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயத்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story