ராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா..

X
Rasipuram King 24x7 |25 July 2025 8:35 PM ISTராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா.
ராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா. பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு அன்பை பரிமாறி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 1951 முதல் 2025 தற்போது வரை இப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியானது 75 ஆம் ஆண்டு பவள விழாவானது நடைபெற்றது. முன்னதாக விழாவில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய திருவள்ளுவர் சிலையை பள்ளி மாணவி திறந்து வைத்த நிலையில் உடன் தொழில் அதிபர் ஜெயசீலன்,ஏ.கே. மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி மற்றும் கட்டிட பராமரிப்புகளுக்கு நிதியினை வழங்கினர்.. அதனைத் தொடர்ந்து பள்ளியில் 1951 ஆம் ஆண்டு முதல் படித்த மாணவ மாணவிகள்,கல்வி பயில்வித்த ஆசிரியர்கள் என பலர் குடும்பத்திருடன் பள்ளிக்கு வருகை புரிந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ராமசாமி, தற்போதைய IAS அதிகாரிகள், முன்னால் IAS அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
