ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75.வது. பிறந்த நாள் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்..

X
Rasipuram King 24x7 |12 Dec 2025 4:40 PM ISTராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75.வது. பிறந்த நாள் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75.வது. பிறந்த நாளை முன்னிட்டு அவரது மன்ற நிர்வாகிகள் ரசிகர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அவரது பேனர் வைத்து பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டி 100.க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், கேக், பிரியாணி, முட்டை, கேசரி உள்ளிட்டவை வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து ரஜினிகாந்த் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் சி.ரமேஷ், புதுப்பாளையம் அசோக்குமார், ஆகியோர் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் முன்னாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான மேட்டு தெரு வி.பாலு அவர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள், பிரியாணி, முட்டை, வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து அவருக்கு நிர்வாகிகள், ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ரசிகர்கள், நிர்வாகிகள் எம். மனோகரன், கே. செல்லதுரை, ரா. நித்தியானந்தம், ஆர். தங்கராஜ், பூக்கடை வி.ரஜினி மாதேஷ், கே.சுரேஷ் ரஜினி, எஸ்.சக்திவேல், ஆர்.யோகராஜன், ஜெ.பாலகிருஷ்ணன், சசிகுமார், எஸ். சுரேஷ், கே.கார்த்திகேயன், ஏ. கமால் விக்கி, எஸ். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
