பாரதிய ஜனதா கட்சியினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

X
அரியலூர், செப்.17- ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் பாரதிய ஜனதா கட்சியினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் வரதராஜன் தலைமையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளையொட்டி அரசு தலைமை பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், பொதுச் செயலாளர் மருதசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல் தலைவர்கள் பரமசிவம், கலியமூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் அரசு தலைமை பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி கலந்துகொண்டு இரத்தம் தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறினர். ரத்ததானம் செய்தவர்களுக்கு ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்ட மருத்துவ ஊரக நலபணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இதில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் ரத்த வங்கி மருத்துவர் உள்ளிட்ட செவிலியர்கள் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தங்களை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Next Story

