தாராபுரத்தில் 76 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தள்ளு முள்ளு வால் பரபரப்பு 

தாராபுரத்தில் 76 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தள்ளு முள்ளு வால் பரபரப்பு 
X
தாராபுரத்தில் 76 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தள்ளு முள்ளு வால் பரபரப்பு 
தாராபுரத்தில் 76 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தள்ளு முள்ளு வால் பரபரப்பு   தாராபுரத்தில் 76 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது ஊர்வலத்தின் போது போலீசாரின் தள்ளமுள்ளு வால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நகர் மற்றும் கிராம பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 76 சிலைகள் வாகனங்கள் முலம் அமராவதி ரவுண்டானா பகுதிக்கு கொண்டு வரப்பட்டது . விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இந்து  இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் சண்முகம் விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள் பற்றி பேசினார். ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் பெரியசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலம் பொள்ளாச்சி ரோடு, பூக்கடை கார்னர் ,பெரிய கடை வீதி ஜவுளிக்கடை வீதி ,பெரிய பள்ளிவாசல், சோளக்கடை வீதி,5 கார்னர் ,பழனி ரோடு வழியாக அமராவதி ஆற்றுக்கு சென்றது அங்கு சிலைகள் கரைக்கப்பட்டது.  ஊர்வலம்  பொள்ளாச்சி ரோட்டை கடந்து பூக்கடைக் கார்னர் பகுதியில் வரும் பொழுது இந்து முன்னணி தொண்டர்கள் அப்பகுதியை மிகவும் மெதுவாக கடந்தனர் .பின்னால் ஏராளமான சிலைகள் இருந்ததால் போலீசார் தொண்டர்களை விரைந்து செல்லுமாறு வற்புறுத்தினார்கள். இதனால் இந்து முன்னணி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது .இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது .பிறகு நிர்வாகிகள் விரைந்து தொண்டர்களை சமாதானப்படுத்தி அப்பகுதியை கடந்து  சென்றனர் . ஜவுளிக்கடை வீதி பெரிய பள்ளிவாசல் அருகே 11 அடி விநாயகர் சிலை வாகத்தில் சென்ற போது அப்பகுதியில் மின்சார ஒயர் மீது உரசியது . மின்சார வாரியத்தினர் உடனடியாக வயரை தூக்கிப் பிடித்து விநாயகர் சிலை செல்ல வழியை ஏற்படுத்தி தந்தனர்.  திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் , வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் ஆகியோர் ஜவுளிக்கடை வீதி பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர் .அதி விரைவு படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர் .4 துணை கண்காணிப்பாளர்கள் ,25 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Next Story