தேனி அரசு கள்ளர் பள்ளியில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு கள்ளர் பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது அரசு கள்ளர் பள்ளிக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வரும் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கடவுள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியலட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கடவுள் பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கருப்பசாமி அழகேசன், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குடியரசு தினத்தை கொண்டாடினர்
Next Story





