கரூர் -76 கோடியில் வேளாண் கல்லூரி கட்டப்படும்-செந்தில் பாலாஜி பேட்டி,
கரூர் -76 கோடியில் வேளாண் கல்லூரி கட்டப்படும்-செந்தில் பாலாஜி பேட்டி, கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி கட்டுவதற்கு தமிழக அரசு 7 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளது. மேலும் வேளாண் கல்லூரி கட்டுவதற்கு 76 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிதிஒதுக்கி தந்துள்ளார். விரைவில் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் துவங்கப்பட உள்ளது என தெரிவித்தார். ஒரு வேளாண் கல்லூரி கட்டுவது என்றால் 100 கோடி ரூபாய் நிதி தேவைப்படும். அதற்காக தமிழக முதலமைச்சர் இடத்திற்காக ஏழு கோடியும் ,கட்டிடங்கள் கட்டுவதற்காக 76 கோடி என மொத்தம் 84 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உடன் இருந்தார். நேற்றைய தினம் வேளாண் கல்லூரி கட்ட வேண்டும் என அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்று அதற்கு பதில் அளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
Next Story




