அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது அரசியலமைப்புத் தினம் கொண்டாட்டம்

X
Komarapalayam King 24x7 |28 Nov 2025 7:55 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது அரசியலமைப்புத் தினம் கொண்டாடப்பட்டது
. இந்திய அரசியலமைப்புத் தினத்தையொட்டி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதல்வர் (பொ) சரவணாதேவி, பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசித்தனர். இந்த நிகழ்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தியது.. கல்லூரியின் முதல்வர் சரவணாதேவி அவர்கள் பேசுகையில், அரசியலமைப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. மாணவர்கள் அதன் உரிமைகள், கடமைகள் மற்றும் மதிப்புகளை புரிந்து சமூக நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறினார். அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சு போட்டிகள், வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணாக்கர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிகளின் மூலம், இந்திய அரசமைப்பின் சிறப்புகள், அது வலியுறுத்தும் சமயச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் சமநலச் சமுதாயம் ஆகிய கொள்கைகள் பற்றி கல்லூரி மாணவர்கள் நன்கு அறிந்து கொண்டனர்
Next Story
