திருப்பூரில் முதலீடு பணம் ஒரே மாதத்தில் இரட்டிப்பாகும் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசை காட்டி ரூ. 77 லட்சம் மோசடி!
Tiruppur (North) King 24x7 |21 Sep 2024 9:15 AM GMT
திருப்பூரில் முதலீடு பணம் ஒரே மாதத்தில் இரட்டிப்பாகும் என வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசை காட்டி ரூ. 77 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைது.
முதலீடு பணம் ஒரே மாதத்தில் இரட்டிப்பாகும் whatsapp குரூப் மூலம் ஆசை காட்டி 77 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைது. திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சமூக வளைதளமான இன்ஸ்டா மூலம் டிரேடிங் சம்பந்தமான நபர்களின் தொடர்பு கிடைத்துள்ளது அதன் மூலம் அவர் விசாரித்த பொழுது இந்த மாதம் 100 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த மாதம் 200 ரூபாய் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளனர் இதனை தொடர்ந்து சுப்பிரமணியை எப் 77 grow capital என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளனர். முதலில் சுப்பிரமணி செலுத்திய சிறிய தொகைகளை உடனடியாக இரட்டிப்பாக்கி அவரிடம் கொடுத்துள்ளனர் இதனால் ஆர்வம் அடைந்த சுப்பிரமணி 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகையை சிறிது சிறிதாக அவர்களது கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால் குறிப்பிட்டது போல பணம் கிடைக்க பெறாமல் அவர்களது தொடர்பும் துண்டிக்கப்பட்டது இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார் அதன் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வங்கி கணக்குகளை வைத்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ஹர்ஷத், சேக் முகமது தவ்பிக், அப்துல் முனாஸ் என்ற நான்கு பேரை கைது செய்தனர்.
Next Story