முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக தொண்டர்கள்
பெரம்பலூரில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கழக கொடியேற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






