நீலகிரி மாவட்டம் குன்னூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது........

X
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது........ தமிழகம் எங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கொண்டாடப்பட்டது குன்னூர் லாலி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் மவுண்ட் ரோடு வழியாக ஊர்வலம் வந்தனர் பின்பு அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்பு 77 வது பிறந்த நாளை ஒட்டி77 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாலநந்தகுமார் குன்னூர் நகர செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
Next Story

