ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.*

X
காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே மாவட்ட அவைத் தலைவர், ஒன்றிய செயலாளர் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர், ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்* விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆவது பிறந்தநாள் விழா காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள் மற்றும் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன், மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள் ஆகியோர் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றனர். இதனையடுத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட கழக அவைத் தலைவர் தோப்பூர் முருகன் மற்றும் ஜெயபெருமாள் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காரியாபட்டி பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை அதிமுக வினர் வழங்கினர். மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரியாபட்டி எஸ்.வி.எஸ் மஹாலில் அதிமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கு பெற்ற மக்களுக்கு அதிமுக சார்பில் பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சின்ன காரியாபட்டி பகுதியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழைப் போற்றும் விதமாக மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோருக்கு அப்பளம், பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் நகரச் செயலாளர் விஜயன் ஆகியோர் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக கிளைச் செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

