முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

X
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மேடையில் வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி இந்த திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்றார். மேலும் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டார்கள் மற்றும் காவல் துறையினர் தங்கள் பணியை அச்சமின்றி செய்தனர். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி வரும் தேர்தலில் ஸ்டாலின் நாட்டுக்கு தேவையா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார். மேலும் வரும் தேர்தலில் அதிமுக பலமான கூட்டணியை அமைக்கும் என்றார். மேலும் அடுத்த ஆண்டு அம்மாவின் பிறந்த நாளின் போது தேர்தல் மற்றும் யுத்த களம் சூடு பிடித்து இருக்கும் என்றார். வரும் தேர்தல் அற்புதமான தேர்தல் எனவும் ஒரு அராஜகமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் என்றார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட விழாவில் ஏராளமான பெண்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story

