காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் மோகனூரில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம் மற்றும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பு.

நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் கட்சி சார்பில், நாட்டின் 77வது குடியரசு தினம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர் டாக்டர் PV செந்தில், மகாத்மா காந்தி, காமராஜர் இந்திரா காந்தி ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் பி.ஏ. சித்திக், மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன், காங்கிரஸ் அலுவலக நிர்வாகிகள் அருணகிரி, மோகநாதன், நவலடி, மாணிக்கம், ஆறுமுகம், சுரேஷ், பழனியப்பன் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, மோகனூர் டவுன் பஞ்சாயத்தின் தூய்மைப் பணியாளர்களுடன் டாக்டர் பி.வி. செந்தில் கலந்துரையாடி குடியரசு தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார். கூடுதலாக, டாக்டர் பி.வி. செந்தில் குமரிபாளையம் கிராம பஞ்சாயத்து கிராமசபைக் கூட்டத்திற்குச் சென்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை (MGNREGA) முழுமையாகவும், பழைய வடிவிலேயே மீண்டும் அமல்படுத்தக் கோரும் தீர்மானத்தை அதிகாரிகளிடம் வழங்கினார் தொடர்ந்து, கிராம மக்களிடம் உரையாற்றிய டாக்டர் செந்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை, விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூக மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்கும் ஒரு நலத்திட்டம், மற்றும் மக்களின் சட்டப்பூர்வ உரிமையாக காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமாகும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்குதல், உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு உருவாக்குதல், ஊரக கட்டமைப்பு வளர்ச்சி, பெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமலும், ஊதிய வழங்கல் தாமதப்படுத்தப்படுவதும், ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. இதன் விளைவாக, வேலை இழப்பு, வறுமை, கடன் சுமை, போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுதியாகக் கோருவது என்னவென்றால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை எந்தவித மாற்றமுமின்றி, முழுமையாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி செய்யப்பட வேண்டும். தேவையான முழு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதே தீர்மானத்தை வலியுறுத்தி நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் கட்சியின் நாமக்கல், இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராம சபைக் கூட்டங்களிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றிட மனு வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.
Next Story