ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 77 வது குடியரசு தின விழா கொண்டாடினர்..

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  77 வது குடியரசு தின விழா கொண்டாடினர்..
X
ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 77 வது குடியரசு தின விழா கொண்டாடினர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைவர் P. நடராஜன், தளாளார் S. பிரகாஷ், பொருளாளர் R. கணேசன், செயலாளர் P. சீனிவாசன், R. பாலசுப்ரமணியம், இயக்குநர்கள் C. ஈஸ்வரமூர்த்தி, R. இளையப்பன். பள்ளியின் முதல்வர் T. மனோஜ்பாபு, திருமதி. P. யுவராணி மற்றும் வித்யா நிகேதன் இண்டல் பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி. J. ஏஞ்சல், ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைவர் P. நடராஜன், தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளியின் தலைவர் P. நடராஜன், சிறப்புரை யாற்றினார். அப்போது குடியரசு தினவிழா பற்றியும், மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும், மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு பற்றியும் எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகள் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மும்மொழிகளில் குடியரசு தின விழாவைப் பற்றியும், தேசத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள். இந்தியாவின் 28 மாநிலங்களின் சிறப்புக்குரிய உடைகள் அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி வளாகத்திலிருந்து மாணவர்களின் பேரணி துவங்கி முக்கிய வீதி வழியாக சென்றது. அப்போது அதில் போதைப் பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு தொடர்பான பதாகைகளை மாணவர்கள் ஏந்திவந்தனர். பல்வேறு தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து மாணவ, மாணவிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இப்பேரணி இராசிபுரம் பெரிய கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தைக் கடந்து பள்ளிக்கு வந்தடைந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
Next Story