திருச்செங்கோடு நகராட்சியில் இந்தியாவின் 77வது குடியரசு தின விழா நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியேற்றி வைத்தார்
Tiruchengode King 24x7 |27 Jan 2026 12:39 AM ISTஇந்திய அரசின் 77 ஆவது குடியரசு தின விழா திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில்கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில்திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுதேசியக் கொடியை ஏற்றி வைத்து நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்
இந்திய அரசின் 77 ஆவது குடியரசு தின விழா திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில்கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் தலைமை வகித்தார் பொறியாளர் சரவணன் வரவேற்பு உரையாற்றினார் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுமுன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்ஆகியோர் கலந்து கொண்டனர் நகராட்சி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பேசியபோது இந்திய குடியரசு பெருமைகள் நகராட்சியின் சாதனைகள் தமிழக அரசு மகளிர்க்கு செய்துள்ள சிறப்பு திட்டங்கள்செய்யப்பட உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்து கூறினார் நகராட்சி சார்பில் செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் அனுமதி அளித்து நிதி வழங்கிய தமிழக முதல்வர் துணை முதல்வர் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும் நகராட்சிக்கு சிறப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் தூய்மை பணியாளர்களின் பணி நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் தான் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக ஆக தரம் உயர்ந்து உள்ளது இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகரதிமுக செயலாளர் நடேசன் கூறியதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் நகர்மன்ற தலைவரும் நகராட்சி பணியாளர்களும் மேற்கொண்ட கடுமையான உழைப்பினால் தான் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது எனவே அனைவரையும் பாராட்டி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.குடியரசு தின விழா நிகழ்ச்சியில்இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணன் மாவட்ட பொருளாளர் டிஎஸ்டி பொன்னுசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுகுமாரன், திமுக இலக்கிய அணி செயலாளர் முருகவேல், பத்திரிக்கையாளர்கள் சார்பில் சுப்பிரமணி,அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் ராஜவேல் திமுக நகர துணை செயலாளர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஒண்ணாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆதித்தமிழர் பேரவை மாநில துணை செயலாளர் தமிழரசு மாவட்ட செயலாளர் சரவணகுமார் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக மாணவரணிஅமைப்பாளர் தியானேஸ்வரன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஹரிகரன்மற்றும் இருபால் நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்தி பேசினார்கள்.சிறப்பாக செயல்பட்ட நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது
Next Story


