திட்டச்சேரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது நிறுவன நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி

திட்டச்சேரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது நிறுவன நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி
X
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் பிறை கொடியை ஏற்றி வைத்தார்
நாகை மாவட்டம் திட்டச்சேரியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78- வது நிறுவன நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்டத் தலைவர் கே.எம்.சம்சுதீன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில பொது குழு உறுப்பினருமான ஏ.அன்வர் பாட்சா, முன்னாள் நகர செயலாளர் என்.எஸ்.தாவூத், ப.கொந்தகை பிரைமரி தலைவர் முகமது இலியாஸ், பிராக்கிராமம் தலைவர் முகமது நாசர், திட்டச்சேரி நகர தலைவர் முஹம்மது அலி, நகர துணைச் செயலாளர்கள் என்.எச்.அப்துல் ரெஜ்ஜாக், எஸ்.ஹாஜா சம்சுதீன், கவிஞர் திட்டச்சேரி அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் நாகூர் எஸ்.சாஹா மாலிம் சிறப்புரையாற்றி, பிறை கொடியை ஏற்றி வைத்தார். நகர நிர்வாகிகள், தாய் சபை சொந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story