ரெட்டமலை சீனிவாசன் 79 -ம் ஆண்டு நினைவு தினம்
Maduranthakam King 24x7 |20 Sep 2024 5:18 AM GMT
ரெட்டமலை சீனிவாசன்79 ம் ஆண்டு நினைவு தினம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தில் சமூக சீர்திருத்தவாதியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வட்டமேசை மாநாட்டில் குரல் கொடுத்தவரும் வழக்கறிஞருமான திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 79 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் பிறந்த ஊரான கோழியாளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அவரது நினைவு துணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி அதன் தொடர்ச்சியாக அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்திற்கு சென்று ஆளுயர சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் செய்யூர் வழக்கறிஞர் த.வழ.பொன்னிவளவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் மாவட்ட செயலாளர் சூ.ரா.ராஜ்குமார் கலந்து கொண்டார். மேலும் பொறியாளர் அணி,மாநில செயலாளர் கீழ்.க.அன்புச்செல்வன்,மாத்தூர் சம்பத்,சிறுத்தை வீரா, திராவிட உதயா, கன.ஈழத்தமிழரசன், அரி, புகழேந்தி, ஈழத்து பிரபா, நரேஷ், கேசவன், உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் முகாம் செயலாளர்கள் கலந்து கொண்டார்.
Next Story