மூலனூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் 79 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
Dharapuram King 24x7 |28 Sep 2024 2:57 AM GMT
மூலனூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் 79 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
மூலனூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் 79 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மாதிரி பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் ஒன் பையிலும் 79 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மூலனூர் பேரூராட்சி தலைவரும் மூலனூர் திமுக பேரூர் கழக செயலாளருமான மக்கள் தண்டபாணி தலைமையில் இதில் அரசு மாதிரி பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 79 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மூலனூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி,நான்காவது வார்டு கவுன்சிலர் .அம்பாள் ரவி மற்றும் ஏழாவது வார்டு செயலாளர் செந்தில்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story