இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா

பெரம்பலூர் மாவட்டம் இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 79 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 79 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக் கொடி நிறத்திலான மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் செய்தியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் , பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இன்று நடைபெற்ற அணிவகுப்பில் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.ஜி.மகேஷ் அவர்கள் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு.ஏ.சீமான் அவர்களும், இரண்டாம் படைப்பிரிவிற்கு பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஜி.கமலி அவர்களும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு.ஆர்.சுந்தரபாண்டியன் அவர்களும், ஊர்காவல் படை முதலாம் படை பிரிவுக்கு ஊர்காவல் படை உதவி படைப்பிரிவு தளபதி திரு.யூ.ஆல்பர்ட் அவர்களும், இரண்டாம் படைப்பிரிவிற்கு ஊர்காவல் படை படைப்பிரிவு தளபதி திருமதி ராணி அவர்களும், தலைமையேற்று வழி நடத்தி சென்றனர். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.2,78,98,441 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் (பொ), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன் மற்றும் அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story