ஜெயங்கொண்டம் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்சில் 79 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி:இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஜெயங்கொண்டம் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்சில் 79 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி:இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
X
ஜெயங்கொண்டம் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்சில் 79 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி:இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அரியலூர், ஆக.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் செப்.4 ஆம் தேதி புத்தம் புது பொலிவுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ள ஏபிஎன் சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் சார்பில் 79-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ஏபிஎன் ராஜா தலைமையில் ஏபிஎன் சில்க்ஸ் & ரெடிமேட்ஸின் பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பாக தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு காந்தி பூங்கா, கடைவீதி, நான்கு ரோடு வழியாக ஊர்வலமாக வந்து சிதம்பரம் சாலையில் உள்ள ஏபிஎன் சில்க்ஸ்& ரெடிமேட்ஸ் கடை முன்பாக தயார் நிலையில்  வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடி கம்பத்தில் தேசியக் கொடியினை ஜெயா சிமெண்ட் ஒர்க்ஸ் உரிமையாளர் கருப்பையா ஏற்றி வைத்தார். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏ.பி.என். சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு வந்திருந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.
Next Story