திருச்செங்கோடு நகராட்சியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
இந்தியா சுதந்திரம் அடைந்து 79வது ஆண்டு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியேற்றி வைத்தார் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சரவணன்,துப்புரவு ஆய்வாளர் சோழ ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆதிநாராயணன்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகர செயலாளர்கள் குமார், அசோக் குமார், மற்றும் இருபால் நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பான குப்பை மேலாண்மை செய்த 66 குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறந்த மதிப்பெண் பெற்ற 27 பள்ளி குழந்தைகளுக்கும்பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது.திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அதற்குப் பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து79 ஆண்டுகள் ஆகிவிட்டதுவெள்ளையர்களிடமிருந்து அரசியல் விடுதலை வாங்கி விட்டோம் ஆனால் இன்னும் அமெரிக்கா நம்மை பொருளாதாரத்தில் அடிமைப்படுத்த நினைக்கிறது.சுதந்திர தினத்தை முழுமையாக சந்தோஷமாக கொண்டாட முடியாதநிலை நீடித்து வருகிறது ரஷ்யா உக்கிரேன் காசா இஸ்ரேல் என பல நாடுகள் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும் எந்த விதமான சண்டைக்குள்ளும் கொள்ளும் சிக்காமல் இந்தியா 79வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்த வேளையில் இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா ஏற்றுமதி வரியை விதித்துள்ளது அதற்கு காரணம் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பதற்காக தான் என கூறப்படுகிறது. நாளை ரஷ்ய அதிபர் புட்டின் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரிடையே நடக்கும் பேச்சு வார்த்தை தான் நமது நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்கிற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. அமெரிக்கா இந்திய பொருள்களுக்கான ஏற்றுமதி வரியை உயர்த்தி உள்ள நிலையில் இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் எடுக்காத நடவடிக்கையாக கிரைனைட் ஏற்றுமதியாளர்கள்,கடல்சார் பொருள்கள் ஏற்றுமதியாளர்கள்,ஜவுளி ஏற்றுமதியாளர்கள் என அனைத்து ஏற்றுமதியாளர்களையும் சந்தித்து பேசி ஏற்றுமதி வரிக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என இருந்து விடாமல் மாநில அரசால் உங்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதனை செய்து தருகிறேன் என உத்தரவாதம் அளிக்கும் முதல்வராக தமிழக முதல்வர் விளங்கி வருகிறார்.நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம் திருச்செங்கோடு பகுதியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியிருந்தாலும் அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறம்பட நடத்தி வருகிறோம் அங்கு படிக்கும் 180 மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று தந்திருக்கிறோம் வரும் 25ஆம் தேதி திருச்செங்கோட்டில் மல்லசமுத்திரம் பகுதியில் ஐடிஐ திறக்கப்பட உள்ளது.துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்இன்சூரன்ஸ் திட்டம் பணியின் போது இறந்தால் 10 லட்சம் என பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சிக்கு முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் அனைத்து மாநகராட்சிகளுக்கும்இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்என கூறினார்.
Next Story



