ஆண்டிமடத்தில் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு,சிறப்பு கிராம சபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு.

ஆண்டிமடத்தில் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு,சிறப்பு கிராம சபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு.
X
ஆண்டிமடத்தில் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
அரியலூர், ஆக.15- ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில்,79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு,சிறப்பு கிராம சபை கூட்டம்,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மரக் கன்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விஸ்வநாதன்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேவியர் சஞ்சீவிகுமார் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story