வநேட்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் 79வது – சுதந்திர தின விழா கொண்டாட்டம்..

வநேட்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் 79வது – சுதந்திர தின விழா கொண்டாட்டம்..
X
வநேட்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் 79வது – சுதந்திர தின விழா கொண்டாட்டம்..
இராசிபுரம் வநேட்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் அங்கமான முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மற்றும் முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தினவிழா 15.08.2025 அன்று காலை 9.00 மணியளவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) முதல்வர் முனைவர். எஸ்.பி. விஜியகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். மா.மருதை அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். பிறகு முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயலாளர் இரா.முத்துவேல் அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில் “தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களை நினைவு கூர்ந்து, தேசத்தின் முன்னேற்றத்தை நோக்கி பாடுபட வேண்டும்” என்று கூறினார். நிகழ்ச்சியில் வநேட்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) முதல்வர் முனைவர். எஸ்.பி. விஜியகுமார், முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.மருதை, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனின் முதல்வர் முனைவர் ஆர்.மணி, புலமுதன்மையர்கள், மற்றும் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் முனைவர். தே.ரமேஷ், சு.பாபு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.
Next Story