நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 79ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 79ஆவது சுதந்திர தினவிழா  கொண்டாட்டம்.
X
நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.நமது இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்று மாணவ, மாணவிகளின் கலைநிகழ்சிகளை நடத்தினர், சுதந்திர போராட்டா தியாகிகளை நினைவு கூறும் வகையில் மாணவ, மாணவிகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரையாற்றினார்கள். பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தகளை கூறும் போது மாணவர்கள் தமது தாய்நாடான தமிழ் நாட்டை ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் வல்லமையை மாணவச் சமுதாயத்தினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும நாட்டிற்கும், நாட்டு மக்களுக்காகவும் தங்கள் கல்வியை அற்பணிக்க வேண்டும் என்றும் வாழ்த்;தினார். பள்ளி முதல்வர் அவர்கள் பேசும் போது நமது பாரதபிரதமர் மோடி அறிவித்துள்ள அறிவிப்பை வெளியிட்டர். ஆகஸ்ட்1 முதல் ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு மாணவரும் கொடுக்கபட்ட லிங்கை பயன்படுத்தி தங்களுடைய பெயரை பதிவு செய்து வுசையபெய சான்றிதழை பதிவிறக்கம் செய்யுமாறு கோட்டுக்கொண்டார். மேலும் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தர் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள். ஒட்டுநர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் அனவைருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story