மீன்சுருட்டி பகுதியில் ரூ79.63 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மீன்சுருட்டி பகுதியில் ரூ79.63 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
X
மீன்சுருட்டி பகுதியில் ரூ79.63 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார்
அரியலூர், ஜன.4- மீன்சுருட்டி பகுதியில் ரூ79.63 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ்,ரூ 7 இலட்சம் மதிப்பீட்டில்,மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், மேலணிக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -2024-ன் கீழ்,ரூ 2 இலட்சம் மதிப்பீட்டில்,ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வழங்குதல், பாப்பாகுடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 2025-ன் கீழ்,ரூ 6 இலட்சம் மதிப்பீட்டில், பாப்பாகுடி காலனி சாலையினை தார் சாலை அமைத்தல், பாப்பாகுடி ஊராட்சியில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2024- 2025-ன் கீழ்,ரூ 9.80 இலட்சம் மதிப்பீட்டில், பாப்பாக்குடி காலனித்தெருவில் தார் சாலை அமைத்தல், காட்டகரம் ஊராட்சியில் குட்டக்கரை கிராமத்தில் 5 லட்சம் மதிப்பில் மயான கொட்டகை அமைத்தல், குட்டக்கரை மயானத்திற்கு ரூ9 இலட்சம் மதிப்பில் மெட்டல் சாலை அமைத்தல், முத்து சேர்வா மட்டும் ஊராட்சியில் முக்குலம் கிராமத்தில் ரூ 15.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தல், காட்டகரம் ஊராட்சி வீரபோகம் கிராமத்தில் 2021- 2022 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ11.78 மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தல், பிள்ளை பாளையம் ஊராட்சி குலோத்துங்கநல்லூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023- 2024ன் கீழ் சிறு பாலத்துடன் கூடிய தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம் (வட்டார ஊராட்சி),முத்துக்குமார் (கிராம ஊராட்சி), வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராஜாத்தி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிமாறன்,பொதுக்குழு உறுப்பினர் .பொய்யாமொழி இளநிலை பொறியாளர் செல்வராணி,பள்ளி தலைமையாசிரியர் (பொ) சேரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், சண்முகம்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் இராஜேந்திரன்,காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வதுரை, முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ், பிள்ளைபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story