ஒரே நாளில் கிலோவுக்கு தக்காளி ரூ.8 அதிகரிப்பு

ஒரே நாளில் கிலோவுக்கு தக்காளி ரூ.8 அதிகரிப்பு

கோப்பு படம் 

ஒரே நாளில் கிலோவுக்கு தக்காளி ரூ.8 அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.42க்கு விற்றது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சாலைப்புதுார், பெரியகோட்டை , சுற்று கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இப்பகுதிகளில் இருந்து பந்தல் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது.சபரிமலை சீசன் காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.34 க்கு விற்றது.

நேற்று வரத்து மேலும் குறைந்ததால் தக்காளி கிலோவுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.42க்கு விற்றது.தக்காளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story