முன்னாள் முதல்வரின் 8 அடி வெண்கல சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்!
Coimbatore (south) King 24x7 |9 Aug 2024 8:51 AM GMT
106 அடி உயர பிரம்மாண்ட கொடி கம்பம் மற்றும் அறிவு சார் நூலகமும் திறப்பு.
கோவை:தமிழ் புதல்வன் திட்டம்,உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால திறப்பு நிகழ்வுகளுக்கு பின் சூலூர் அடுத்த கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சாலை மார்க்கமாக வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு தனியார் நிலத்தில் திமுக சார்பில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.தொடர்ந்து அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த நூலகத்தையும் 106 அடி உயர பிரம்மாண்டக் கொடி கம்பத்தையும் திறந்து வைத்தார்.அறிவு சார் நூலக கட்டிட வளாகத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள பெரியார்,அண்ணா, அன்பழகன் மற்றும் கருணாநிதி ஆகியோரது படங்கள் திமுக அரசின் காலை உணவு திட்டம், மகளிர்க்கு நகரப் பேருந்துகளில் இலவசம் உள்ளிட்ட சாதனை விளக்க புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் முத்துச்சாமி,எ.வ.வேலு, பொன்முடி,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story