ஆரணியில் ரூ 8 லட்சம் மதிப்பில் இரண்டு மின் மாற்றிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு.

ஆரணியில் ரூ 8 லட்சம் மதிப்பில் இரண்டு மின் மாற்றிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு.
X
ஆரணி, ஆக 27. ஆரணியில் ரூ.8 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய மின் மாற்றிகளை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
ஆரணி விஏகே நகர் காளி கோவில் அருகில் மற்றும் இ.பி.நகர் பகுதி ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்புள்ள “25கேவிஏ” கொண்ட மின்மாற்றிகள் துவக்கப்பட்டது. நிகழச்சியில் மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் தலைமை தாங்கினார். ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மின்மாற்றியை துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், பொறியாளர் மாலதி, அதிமுக நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், கே.குமரன் மற்றும் மின்சார துறையினர் இருந்தனர்.
Next Story