பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் 8ந் தேதி நடக்கிறது
Virudhachalam King 24x7 |4 Sep 2024 6:07 PM GMT
விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தில் கரந்தை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகின்ற 8 ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக நாளை 6 ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், விநாயகர் பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தன பூஜையுடன் தொடங்கி மாலை 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை ஹோமமும், மகாதீபாரதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் 7 ந் தேதி விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளும் நடைபெற உள்ளது. வருகின்ற 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் மகமாயி அம்மன் கும்பாபிஷேகமும் 7.45 மணிக்கு ஸ்ரீ பிடாரியம்மன் கும்பாபிஷேகமும், காலை 8 மணிக்கு விமான கோபுரங்கள் கும்பாபிஷேகமும், காலை 8.15 மணிக்கு மூலவர் ஸ்ரீ கரந்தை அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் மகாதீபாரணைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்
Next Story