மண்டல அளவிலான 8வது வாலிபால் போட்டி
Komarapalayam King 24x7 |10 Sep 2024 8:40 AM GMT
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில் மண்டல அளவிலான விளையாட்டு அமைப்பான கோவை சகோதயா சார்பில் எட்டாவது வாலிபால் போட்டி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியில், மண்டல அளவிலான விளையாட்டு அமைப்பான கோவை சகோதயா சார்பில் 8வது வாலிபால் போட்டி நடந்தது. போட்டியை பள்ளியின் ரவீந்திரன் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ மாணவியர்கள், 14 பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் எஸ்.எஸ்.எம் சென்ட்ரல் பள்ளியைச் சேர்ந்த 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவு முதல் பரிசையும் 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு இரண்டாம் பரிசையும் பெற்றனர். .14 வயது மாணவர் பிரிவில் எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளி முதலிடமும், ஈரோடு வேளாளர் வித்யாலயா இரண்டாமிடமும் பெற்றனர். 14 வயது மாணவியர் பிரிவில் வேளாளர் வித்யாலயா முதலிடமும், பெருந்துறை சாகர் இன்டர்நேசனல் பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர். 17 வயது மாணவர் பிரிவில் வேளாளர் வித்யாலயா முதலிடமும், எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளி.இரண்டாமிடமும் பெற்றனர். 17 வயது மாணவியர் பிரிவில் சாகர் இன்டர்நேசனல் பள்ளி முதலிடமும், வேளாளர் வித்யாலயா, இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயது மாணவர் பிரிவில் வேளாளர் வித்யாலயா முதலிடமும், கோவை கேம்ஃபோர்டு இன்டர்நேசனல் பள்ளி, இரண்டாமிடமும் பெற்றனர். மாணவர் பிரிவு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை வேளாளர் வித்யாலயாவும், மாணவியர் பிரிவு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை வேளாளர் வித்யாலயா மற்றும் சாகர் இன்டர்நேசனல் பள்ளியினர் பெற்றனர். மாணவ மாணவியர் பிரிவு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை வேளாளர் வித்யாலயா.பள்ளியினர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் புஷ்பா இளவரசன் வழங்கி வாழ்த்தி பேசினார். . பள்ளியின் முதல்வர் மிராஷ் கரீம் உள்பட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ,. மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் விஜயகுமார், ஆண்டனி, வசந்த், தினேஷ், யுவராணி, சுசீலா செய்திருந்தனர்.
Next Story