தாராபுரத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்விகும் கல்யாண ராணி சத்யாவுக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு பழக்கம் என விசாரணையில் தகவல்
Dharapuram King 24x7 |17 Sep 2024 11:34 AM GMT
தாராபுரத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்விகும் கல்யாண ராணி சத்யாவுக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு பழக்கம் என விசாரணையில் தகவல்
தாராபுரத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்விகும் கல்யாண ராணி சத்யாவுக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு பழக்கம் என விசாரணையில் தகவல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வருபவர் மகேஷ் அரவிந்த். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒன்றான அன்பே ஆப் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை சென்றது. அப்போது கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பல்லபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் தமிழ்ச்செல்வி வயது 32 என்பவர் என்பவர் கரூர் பகுதியில் டெய்லர் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் மற்றவர்களுக்கு சேலை வாங்கி விற்பனை செய்வது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அப்போது தமிழ்செல்வி இடம் சத்யா தாராபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர் உடன் கடந்த எட்டு மாதமாக பழகி வருகிறேன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம் என கூறியதாக தெரிகிறது. மேலும் சத்யா மற்றும் மகேஸ் அரவிந்த் இருவரும் கரூருக்கு சென்று திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் நகைகள் வாங்கும் போது தமிழ்ச்செல்வியும் சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் பழனியில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகேஸ் அரவிந்த் தமிழ்செல்விக்கு 2500 ரூபாய் ஜிப்பே yil பணம் அனுப்பி கார் புக் செய்து பழனிக்கு திருமணத்துக்கு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. அங்கு வந்த தமிழ்ச்செல்வியும் சத்யாவுக்கும் மகேஸ் அரவிந்திற்கும் திருமணம் செய்து வைத்த பிறகு வீட்டிற்கு சென்று தாலி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு புதுமண தம்பதியான சத்யா மற்றும் மகேஸ் அரவிந்துக்கு சடங்குகளை செய்து முடித்த பின் தனது ஊருக்கு சென்றதாக தெரிவித்தார். இதற்கு முன்பு சத்தியா பல ஆண்களை ஏமாற்றிய விஷயம் எனக்கு தெரியாது எனவும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மகேஷ் அரவிந்துடன் பழகும் விஷயத்தை மட்டும் சத்யா என்னிடம் கூறியதாகவும் அதற்கு முன் சத்யா எத்தனை நபர்களை ஏமாற்றுகிறார் என்பது குறித்தும் எனக்கு தெரியாது என தெரிவித்தார். இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறியதை தொடர்ந்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story