பண்பொழி திருமலைக்கோயிலில் நவ. 8இல் கந்தசஷ்டி விழா தேரோட்டம்
Sankarankoil King 24x7 |3 Nov 2024 2:13 AM GMT
பண்பொழி திருமலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இந்த விழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாள்தோறும் மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள், காலை-மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7ஆம் நாளான இம்மாதம் 6ஆம் தேதி வண்டாடும் பொட்டலில் பெரும் திருப்பாவாடை வைபவம், 7ஆம் தேதி மாலை சூரசம்ஹாரம், 8ஆம் தேதி தேரோட்டம், 9ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.
Next Story