திருப்பரங்குன்றத்தில் 8 பேர் கைது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் போலீசாரிடம் வாக்கு வாதம் செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு கந்தூரி வழிபாடு செய்வதற்காக இன்று (டிச.25) வந்த இஸ்லாமியர்களை காவல்துறையினர் மலைமீது உயிர்பலி கொடுக்கக் கூடாது என தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் களைய மறுத்ததால் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story