ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வில்லராயன்குளம் கண்மாய் அமைந்துள்ளது.வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கும் முன்பு பெய்த தொடர் கனமழையின் காரணமாக இப்ப பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் மூலமாக கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்து தற்போது இப்பகுதியில் உள்ள கண்மாயிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் மலைப்பகுதியில் இருந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு கண்மாயில் கிடந்துள்ளது.இந்த நிலையில் கண்மாய் அருகே உள்ள வத்திராயிருப்பு சேர்வராயன் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் கண்மாயில் கிடந்த கொசு வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர். பின்னர் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வலையில் சிக்கி இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.பின்னர் மீட்கப்பட்ட மலைப் பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

